Wednesday, March 11, 2009

பத்தாண்டு நிறைவு

எம் பள்ளி தொடங்கி இந்த ஆண்டுடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, எமது தொடர்ந்த செயல்பாடுகளாலும், பல நல்ல உள்ளங்களின் தொடர்ந்த உதவி மற்றும் ஒத்துழைப்பினாலும் எம் பள்ளி இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது.  தொடர்ந்து வளர்த்தெடுக்க முயன்று வருகின்றோம்.  அதற்கான உடனடி திட்டமாக பள்ளிக்கென சொந்தமாக இடம் வாங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். பள்ளிக்கான இடம் 3,00,000 உருவாயில் வாங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் ஆர்வலர்கள் இந்த பெரும் முயற்சியில் பேருதவி செய்து எம் பள்ளி வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, March 4, 2008

சுற்றுலா



















எமது பள்ளியில் பயிலும் மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கல்விச் சுற்றுலா சென்று வருவோம். இந்த ஆண்டும் 01/03/2008 அன்று வரலாற்று சிறப்பு பெற்ற காவிரிபூம்பட்டிணம் என்று அழைக்கப்படும் பூம்புகார், இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ள சதுப்பு நிலக் காடான பிச்சாவரம் சென்று படகில் பயணம் சென்று இயற்கை எழில் கொஞ்சும் அந்த பகுதிகளைப் பார்வையிட்டோம். மாணவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.

Tuesday, February 19, 2008

அறிமுகம்


வணக்கம்,

கடந்த 06-06-1998 அன்று தோழர் தியாகு அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மொட்டு, மலர், ஒன்று ஆகிய வகுப்புகளில் 22 மாணவர்களைக்கொண்டும் மூன்று ஆசிரியர்களைக்கொண்டும் தொடங்கப்பட்டது நாச்சியார்கோயில் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி. எம் பள்ளி இன்று 75 மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. எம் பள்ளி தமிழர் உறவின்முறைக் கல்வி அறக்கட்டளை(குடந்தை) யால் தொடங்கப்பட்டு மூன்றாவது ஆண்டிலிருந்து நாச்சியார்கோயில் தமிழர் உறவின்முறைக்கல்வி அறக்கட்டளையால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. எம் பள்ளி மாணவர்கள் பல முறை மாவட்ட மண்டல அளவிலான ஓவியப்பொட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளனர் எம்பகுதியில் நடந்த ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவைகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளனர்.ஓவ்வொரு ஆண்டும் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்டு தமிழகத்தின் வரலாற்றுப்பதிவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.மாணவர்களின் உடல் நலன் கருத்தில்கொண்டு தமிழில் தம்முடைய மருத்துவ முதுவர் தேர்வை எழுதிய மருத்துவர் ஐ. சிவசுப்பிரமணிய செயசேகர் அவர்களால் தொடர்ந்து மருத்துவ ஆய்வு செய்யப்படுகின்றது.மாணவர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பலமுறை பெற்றோர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றது.தாய்த்தமிழ்க் கல்விப்பணி(தமிழ்நாடு) யால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் எம் பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.மழலையர் வகுப்புக்கான பாடத்திட்டம் தமிழ்நாடு தாய்த்தமிழ்க் கல்விப்பணியால் தயாரிக்கப்பட்டு எம் பள்ளியில் நடத்தப்படுகின்றது. மழலையர் வகுப்புக்கான பாடத்திட்டம் தமிழ்நாடு தாய்த்தமிழ்க் கல்விப்பணியால் தயாரிக்கப்பட்டு எம் பள்ளியில் நடத்தப்படுகின்றது. ஓவ்வொரு ஆண்டும் எம்பள்ளி ஆண்டுவிழாவிற்கு தமிழகம் அறிந்த கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்களை அழைத்து சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஓவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவியல் மற்றும் படைப்பாக்கத்தை ஊக்கப்படுத்த மாணவர்களால் தயாரிக்கப்பட்ட வௌ;வேறு பொருள் குறித்து கண்காட்சி நடத்தப்படுகின்றது. புள்ளி அரசின் ஏற்பிசைவு பெற பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், முதலில் பள்ளி தொடங்கப்பட்ட இடம் அரசின் விதிகளுக்கு போதுமான ஏந்துகள் இல்லாத காரணங்களினாலும் ஏற்பிசைவு பெற முடியவில்லை. கட்டடம், இடம் ஆகியவை போதிய தகுதியின்மையே காரணமாக இருந்தது. இந்நிலையில் அரசு கொண்டுவந்த சில கட்டுப்பாடுகளால் உடனடியாக மாற்றியமைத்தால் தான் பள்ளியை தொடர்ந்து நடத்த இயலும் என்ற நிலையில் பல நெருக்கடிகளுக்கு இடையில் பள்ளியின் அரசு ஏற்பிசைவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தோம். இதற்கான நிதியை நன்கொடையாகப் பெறுவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தின் சில ஊர்களிலும் குறிப்பாக குடந்தை அருகில் உள்ள பகுதியளிலும் திரட்டுவதென ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு கொடுத்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்தால்தான் பள்ளி தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலையில் கட்டடம் கட்டி முடித்தால்தான் விண்ணப்பிக்க இயலும் என்ற நிலையில் கிடைத்த நன்கொடை போக மீதம் தேவைப்பட்ட தொகை சில நண்பர்களிடமும் பள்ளி ஆர்வலர்களிடமும் சடனாகப்பெற்றும், பொருட்கள் கடனாகப் பெற்றும் அரசு வைத்திருக்கின்ற குறைந்த அளவிற்கு தகுதியான வரை கட்டுமான வேலைகள் முடிக்கப்பட்டு உரிய நேரத்தில் அரசுக்கு விண்ணப்பித்தோம். இந்நிலையில் 05-05-2006 நாளிட்ட தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஒப்புதல் ஆணை (பதிவு எண் 20-109-2006) வழங்கப்பட்டுள்ளது. எம்பள்ளி மீது அக்கரையும், நம்பிக்கையும் கொண்டு தம் மழலையர்களை எம் பள்ளியில் தொடர்ந்து பயில வைக்கும் பெற்றோர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி

Sunday, February 10, 2008

எங்களது தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது. எங்கள் பள்ளியில் பயின்று ஐந்தாம் வகுப்பு முடித்து உயர்நிலைப் பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள் அவரவர் வகுப்பில் முதலிடங்களிளேயே இருக்கின்றனர்.